×

கொத்தவரங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கொத்தயத்தில் கொத்தவரங்காய்களை அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, கொத்தயத்தில் விவசாயிகள் அதிகளவில் கொத்தவரங்காய் நடவு செய்துள்ளனர். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. ஆனால் கடுமையான வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளையும் கொத்தவரங்காய்கள், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பிற ஊர்கள் மற்றும் கேரள மாநிலத்திற்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கொத்தவரங்காய் விளைச்சல் சரிந்துள்ள நிலையில் அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில், கடந்த மாதம் 10 கிலோ கொத்தவரை ரூ.300க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 10 கிலோ கொத்தவரை ரூ.150க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். …

The post கொத்தவரங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Otanchatram ,Kothayam ,Dindigul District ,Othanchatram Taluk ,Kottayam ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் கோடை மழையால்...